நவோதயாவும் நட்பும்

Posted by : K.Dhanalakshmi (8th Batch)

"ஏழு கழுதை வயசாச்சு இன்னும் என்ன உனக்கு பிரண்ட்ஸ் வேண்டி கடக்கு.." "நவோதயா" அப்படி என்னதான் இருக்கு அந்த வார்த்தையில..நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை. ஏனெனில் நீங்கள் எங்கள் பள்ளி இல்லை.. எங்களை புரிந்துகொள்ள நீங்கள் அங்கே வாழ்ந்து இருக்க வேண்டும்..

காலை நேர பிடி வகுப்பிற்கு வரமால் தூங்கி தொலைந்த நண்பனுக்கும் சேர்த்து நீயே அட்டனெனஸ் போட்டதுண்டா.? தாமதமாய் கிளம்பிய தோழிக்காக தானும் காத்திருந்து லேட்டாக வந்ததற்காக பத்து ரவுண்டு அதிகமாக கிரவுண்டை இருவருமாய் சுற்றியதுண்டா? சாப்பிட தட்டு இல்லாமல் இருவரும் ஒரே தட்டில் சேர்ந்து சாப்பிட்டதுணடா? தேங்காய் எண்ணெய் பஜ்ஜி, சுவர் ஏறி சினிமா தியேட்டர் என தனித்தனியே சேட்டைகள் செய்து ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுக்காமல் ஒட்டு மொத்த நண்பர்களும் வார்டனிடம் சரணடைந்ததுண்டா? வீட்டின் ஞாபகம் வந்து அழுதிடும் வேலைகளில் உள்ளுக்குள் தான் அழுதாலும் அழாதே நான் இருக்கேன் னு  நண்பனை தோள் சாய்த்து தைரியம்  சொன்னதுண்டா..ஹோம் அசைன்மெண்ட் முடிக்காமல் வந்த நண்பர்களுக்காக முடித்து வந்த நீயும் கிளாஸ் ரூமை விட்டு வெளியே நின்றதுண்டா.. பேரண்ஸ் டேவிற்கு பெற்றோர்கள் வராத நண்பனை உன் பெற்றோருடன் அழைத்து சென்று ஒன்றாக சாப்பிட்டதுண்டா..நண்பனின் ஜட்டியை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் அவனோடு பகிர்ந்தததுண்டா.? இத்தனையும் அறிந்து தவறுகளை பொறுத்து ஏழு ஆண்டுகளில் உன்னை நல் வழிபடுத்தி உங்களின் ஆசிரியர்களே அன்னை தந்தையாய் உங்களுக்கு அமைந்ததுண்டா?. இல்லை எனில் எங்களின் நேசம் புரிய உங்களுக்கு வாய்ப்பில்லை.

பண்டிகைகளுக்கு காத்திருக்கும் குழந்தைகள் போலத் தான் ஒவ்வொரு முறையும் நண்பர்களின் சந்திப்புக்காக காத்திருந்து ஏங்கித் தொலையும் மனது.. இரவின் மெல்லிசையாய்.. கடற்கறை நடைப்பயணமாய்.. ஒரு மன அழுத்தத்திற்கு மாமருந்தாய்.. அங்கே வலிகள் இல்லை.. எதிர்பார்ப்புகள்  இல்லை. ஏமாற்றங்கள் இல்லை.. ஒவ்வொரு முறையும் புதிதாய் பூத்து குலுங்கும் அன்பின் நெஞ்சங்கள். "மச்சி  நல்லா இருக்கியா? தங்கச்சி எப்படி இருக்கா? என நண்பனின் மனைவியையும் "சார் எப்படி இருக்கார்? என தோழியின் கணவனையும் நலன் விசாரித்து எங்களின் குழந்தைகளோடு தலைமுறையாய் சேர்ந்தே வளரும் எங்களின் நட்பு.. 

ஒருமித்த எண்ணம்.. அன்பின் பரிமாற்றங்கள். குறிப்பறிந்து உதவி. வலிமையான விவாதங்கள். இன்று வரை எங்களை வழிநடத்தும் எங்களின் ஏழு ஆண்டுகால வலிமையான கல்வி முறை..கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்.. நாங்கள் நவோதயர்கள்...

Post comments
Please login to post a comment