ஒரு பங்கு சந்தை ஆலோசகரான , நான் சில காலங்களாக நிறைய அழைப்புகள் என் வாடிக்கையாளர்கள் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறேன்.
அவைகள் நிறைய ஏமாற்று வேலைகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது அதாவது நீங்கள் பத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று நிறைய ஏமாற்று நிறுவனங்கள் ஆசை வார்த்தைகள் பேசி அவர்களிடம் இருந்து பணம் பெறத்தொடங்கி நல்ல ஜோரா கல்லா கட்ட தொடங்கியுள்ளார்கள்.
நீங்கள் இந்த ஏமாற்று ் வேலையில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள் ஏனென்றால் பங்கு சந்தை என்பது ஏற்றம் இறக்கம் உடையது ஆகையால் கண்டிப்பாக மாதம் மாதம் நான் சொன்ன பணத்தை தர முடியாது அப்படி தருகிறேன் என்றால் நான் ஏதோ ஒரு தவறு செய்கிறேன் என்று அர்த்தம் ஆகையால் தயவுசெய்து இந்த மாதிரியான பிராடுகளை தவிர்க்கவும்.
சமீப காலங்களாக சில நண்பர்கள் இலட்சங்கள் இழந்து இருக்கிறார்கள்.
அதாவது பேங்கில் பிக்ஸ்டு டெபாசிட் மேலும் 6 முதல் 9 விழுக்காடு வரை நாம் வட்டி பெறலாம்
அதுவே மியூச்சுவல் ஃபண்ட் என்றால் 10 முதல் 15 சதவீதம் உங்கள் முதலீட்டில் இருந்து லாபம் பெறலாம் இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை
அதே போல் தான் பங்கு சந்தையிலும் வருடத்திற்கு 20 முதல் 30 விழுக்காடு வரை உங்கள் முதலீட்டிலிருந்து லாபம் இயற்றலாம் அவையும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதே.